அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது.
தற்போது விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தால் அவரை கழட்டி விட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இதில் தலையிட்டுள்ள நடிகர் அஜித் குறித்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனே இயக்கட்டும் என தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
