தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், தனுசுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். தற்போது தங்கலான் படத்திலும் விக்ரமுடன் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவரை விட வயது குறைந்த இளைஞரை காதலிப்பது போன்ற கதையம்சம் கொண்டது.
இந்த நிலையில் ஒரு ரசிகர் வயதில் மூத்த பெண்ணுக்கும் வயது குறைவாக உள்ள ஆணுக்கும் இடையேயான காதல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மாளவிகா மோகனன் கூறும்போது, “காதல் என்றால் காதல் தான். காதல் அந்தஸ்து பார்க்காது. காதலுக்கு வயது இல்லை. அதற்கு சமூக எல்லைகளும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.