குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால் – வைரல் வீடியோ

நடிகையும் மாடலுமான காஜல் அகர்வால் ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்ததோடு அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இவர் பாரதிராஜாவின் தமிழ் படமான பொம்மலாட்டத்தில் (2008) ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் காஜல் அகர்வால்.

இவர் நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா என்ற படம் வெளியானது, இப்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நெய்லுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர்களுக்கு தனது மகனுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ வீடியோ,