பிக்பாஸ் வனிதா புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 31 ஜனவரி 2023

Vanitha Vijaykumar – 31 January 2023 –  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளே அடையாளம் தெரியாமால் மாறி வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

1995 இல் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார், அதன்பின் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் திரையுலகில் பிஸியாக வலம் வரும் வனிதா, தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வனிதா வித்தியாசமான தோற்றத்துடன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அவர்களின் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.