மீண்டும் சென்னை வந்த ஹன்சிகா சொன்னவை………

நடிகை ஹன்சிகாவுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் திருமணத்திற்கு பின் முதல் முறையாக நடிகை ஹன்சிகா சென்னை வந்துள்ளார்.

Hansika,30th Jan 2023

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல் முறையாக நடிகை ஹன்சிகா சென்னை வந்துள்ள ஹன்சிகா செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எப்போதும் சென்னைக்கு வந்தாலும் எனது அம்மா வீட்டுக்கு வருவது போல் மகிழ்ச்சியாக இருக்கும், தற்போது படப்பிடிப்புக்காக சென்னை வந்து உள்ளேன், இந்த ஆண்டு மட்டும் என் கைவசம் 7 படங்கள் உள்ளது, இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியான ஆண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது, நான் என்னுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் காரணமாக தனக்கு வரும் பட வாய்ப்புகள் குறையவில்லை என்றும் தற்போது ஏழு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Hansika,30th Jan 2023

மேலும் நடிகை ஹன்சிகா ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ரௌடி பேபி’ விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கார்டியன்’ மற்றும் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் டைட்டில் வைக்கப்படாத திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் அவர் நடித்து வருகிறார்.