அச்சு அசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண்!!!

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை சௌந்தர்யா. அவர் போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு இளம் பெண் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு ரசிகர்கள் ஜூனியர் சௌந்தர்யா என்று பட்டம் ஒன்றையும் அளித்துள்ளனர்.

Sowntharya, 30th Jan 2023

நடிகை சௌந்தர்யா ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’, ’படையப்பா’ கமல்ஹாசன் நடித்த ’காதலா காதலா’ கார்த்திக் நடித்த ’பொன்னுமணி’ விஜயகாந்த் நடித்த ’தவசி’, ’சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் நடிகை செளந்தர்யா காலமானார்.

Sowntharya, 30th Jan 2023

இந்த நிலையில் சமீப காலமாக அச்சு அசலாக சௌந்தர்யா போலவே இளம் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோக்கள் வெளியிட்டுவருகின்றார். அவரது வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருவதுடன் அவருக்கு ரசிகர்கள் ஜூனியர் செளந்தர்யா என்ற பட்டமளித்துள்ள நிலையில் இன்னும் நிறைய வீடியோக்களை வெளியிடுங்கள் என்று தங்களது கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்துள்ளனர்.