தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்த ‘தசரா’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னணி நடிகரான நானிக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என்றும் அல்லு அர்ஜுனுக்கு ’புஷ்பா’ போல் நானிக்கு ஒரு ’தசரா’ என ரசிகர்கள் இந்த டீசரை பார்த்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் முக்கிய இடத்தில் நடித்துள்ளதுடன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் நவீன் நூலில் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.