பத்து தல படம் குறித்த மாஸ் தகவல் – கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Simbu, Krishna, Paththuthala, Ar Rahuman, 30th Jan 2023

இந்த நிலையில் வரும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘பத்து தல’ படம் குறித்த மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனேகமாக சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்தப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது.