அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறார் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது.
தற்போது விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தால் அவரை கழட்டி விட்டுள்ளனர்.
ஆனால் இது விக்னேஷ் சிவனுக்கு புதிதில்லையாம். நான்கு வருடங்களுக்கு முன்பே லைக்கா இதே போன்ற வேலையை செய்திருக்கிறது.
தற்போது போல் 2019 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா கைவிரித்துள்ளது.
அதேபோன்று இப்போது மறுபடியும் ஏகே 62 படத்திலும் இரண்டாவது முறையாக லைக்கா தன்னுடைய வேலையை காட்டி இருப்பது குறித்து விக்னேஷ் சிவன் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
