அஜித் படத்தை இயக்கப் போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து உருவாக உள்ள படத்தை விஷ்ணுவர்தன், அட்லீ மற்றும் முருகதாஸ் ஆகியோர் இயக்க போட்டா போட்டிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் தொடர்ந்து இந்த நான்கு இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திருவிழா காத்திருக்கிறது.

Directors competing to direct Ajith's film