மிர்னாளினி ரவி புதிய படங்கள் 29 ஜனவரி 2023

Mirnalini Ravi – 29 January 2023 – ஒரு இந்திய நடிகையான இவர் முக்கியமாக தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மிர்னாளினி ரவி, மே 10, 1995 அன்று தமிழ்நாட்டின் புதுச்சேரியில் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் .

2019 இல் நடிகர் வருண் தேஜ் மற்றும் அதர்வாவுடன் மிர்னாளினி நடித்த கடலகொண்ட கணேஷ் திரைப்படம் இவரது முதல் தெலுங்கு படமாக அமைந்தது. அதே ஆண்டு இயக்குநர் சுசீந்திரனின் சாம்பியன் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். இவர் 2021 இல் விஷாலின் எனிமி, எம். சசிகுமாரின் எம்.ஜி.ஆர் மகன், அறிமுக நடிகர் சதீஷ்குமாருடன் ஜாங்கோ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அவர் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் சிறந்த அறிமுக ஹீரோயின் தமிழ் விருது “சாம்பியன்” படத்திற்கும், சிறந்த துணை நடிகை தெலுங்கு விருது “கடலகொண்டா கணேஷ்” படத்திற்கும் பரிந்துரைக்கப்பட்டார். மிர்னாளினியின் நடிப்பில் வெளிவந்த படம் சியான் விக்ரமின் கோப்ரா ஆகும்.