வம்சி இயக்கத்தில் தில் ராஜீ தயாரிப்பில் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே. நீண்ட இடைவேளைக்கு பிறகு அம்மா, அப்பா மற்றும் கூட்டு குடும்பம் செண்டிமெண்ட் கொண்ட ஒரு கதையம்சம் கொண்ட படமாக இது உள்ளது.

இவ்வாறு உள்ள நிலையில் மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் “வாரிசு” திரைப்படத்தை பார்க்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறிய போது ‘கூட்டு குடும்பத்தின் பெருமையையும், உறவுகளை மேன்மையையும் இளைய தலைமுறைகளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது என விளக்கம் அளித்தது.

மாணவர்களுக்கு இளம் வயதிலேயே கூட்டுக் குடும்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் “வாரிசு” படத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்றது குறித்து விஜய் ரசிகர்கள் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.