‘ஸ்ரீ ‘ படம் குறித்த ஜோதிகாவின் வைரல் சமூகவலைத்தள பதிவு

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் தான் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 25 வருடங்கள் கழித்து தற்போது ’ஸ்ரீ’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். பிரபல பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’ஸ்ரீ’ என்ற திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jhothika, 29th Jan 2023

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை அடுத்து ஜோதிகா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கனத்த இதயத்துடன் ’ஸ்ரீ’ படத்திற்கான எனது பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நான் பணியாற்றிய சிறந்த குழுவினர்களில் ஒரு டீம் தான் இந்த பட குழு. இந்த அர்த்தமுள்ள சினிமாவில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்கும் மரியாதை செய்ததற்கும் துஷார் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Jhothika, 29th Jan 2023

மேலும் இந்த படத்தின் ஹீரோவா ராஜ்குமார் ராவ் அவர்களின் தீவிர ரசிகை நான். பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து எனது நடிப்பை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் குழுவினர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.