நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியோர்களுடன் போட்டியா? என்ற கேள்விக்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
வரும் 3ஆம் தேதி ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவான ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி முதல் முறையாக ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ’ரன் பேபி ரன்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறிய போது முதல் படம் அரசியல் படமாகவும், இரண்டாவது படம் ஆன்மிக படமாகவும் இருந்ததால், ஒரு இமேஜுக்குள் அடங்கி விடக்கூடாது என்பதற்காக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன்.
‘ரன் பேபி ரன்’ படம் இருக்கை நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் நடித்த ’எல்கேஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களும் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்றும் தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயன், சந்தானம் என யாரையும் நான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் ’மைக்கேல் மதன காமராஜன்’ மாதிரி ஒரு படத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.