திரையுலகில் பிரபல நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திருமண புகைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் லயோலோ காலையிலே படிக்கும்போது காதலித்து வந்ததாகவும் அதன் பிறகு இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் இந்த திருமணம் நடந்ததாகவும் செய்திகளில் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருமணம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலின் அவருடைய திருமண புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகாவா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் இந்த புகைப்படத்தில் உள்ளார்.