சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் ‘சூர்யா 42’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இதனையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் குறிப்பாக இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Surya, Vadivasal, Vertimaran, Surya 42, 29th Jan 2023

இந்த நிலையில் வாடிவாசல் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ‘காட்ஸில்லா’, ‘அவதார்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த டிஜிட்டல் நிறுவனம் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அமைக்கும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வேறலெவலில் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Surya, Vadivasal, Vertimaran, Surya 42, 29th Jan 2023

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க தொடங்குவார் என்றும் கூறப்படுகின்றது.