பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக வெளிவந்த படங்கள் வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் தமிழ்நாடு மட்டுமின்றி உலகலளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சில இடங்களில் வாரிசு வசூலில் பின்தங்கி இருக்கிறது.

இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த இரு வாரங்களுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் பதான். ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் துவண்டுபோய் இருந்தா பாலிவுட் திரையுலகை மீட்டு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்த 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களின் மொத்த வசூலையும், பதான் திரைப்படம் அசால்ட்டாக 4 நாட்களில் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.
