‘தளபதி 67’ குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்!!

விஜய் நடிப்பில் வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதில் விஜய், சஞ்சய் தத் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Vijay, Logesh Kanagaraj, 25th Jan 2024

இந்தநிலையில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் ஏக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் ’வாரிசு’ படம் ரிலீசானவுடன் ’தளபதி 67’ படத்தின் அப்டேட் வரும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் லலித் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி முதல் வாரம் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வரும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் ’தளபதி 67’ படத்தின் டீசரும் பிப்ரவரி முதல் வாரமே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்து ’தளபதி 67 ’படத்தின் அப்டேட்டுகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.