சமீபத்தில் இவர் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்பது தெரிந்ததே.
இதையடுத்து அஜித் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் துணிவு படம் வெளியாகும் தினம் அன்று அஜித் ரசிகர் ஒருவர், லாரி மீது நடனமாடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது .
இதனையடுத்து துணிவு படத்தில் வரும் கொள்ளை காட்சி பாணியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அணில் ரகுமான் என்ற நபர் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் இப்படி செய்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து வரும் குறித்த செய்திகளால், நவீன திரைத்துறை இன்னும் என்னவெல்லாம் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுக்கப்போகிறதோ என சமூக ஆர்வலர்கள் கவலைகொண்டுள்ளனர்.