பிரபல நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல் மற்றும் ஜீவா

’ஜல்லிக்கட்டு’ இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ராஜஸ்தான் பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்களது காட்சிகள் விரைவில் படமாக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகர் மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ’உன்னை போல் ஒருவன்’ என்ற படத்தில் நடித்திருந்தனர். அதேபோல் மோகன்லால் விஜய்யுடன் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Exit mobile version