தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக விளங்கும் சினேகா – பிரசன்னா தம்பதிக்கு விஹான் என்ற மகன், ஆத்யந்தா என்ற மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது குழந்தைகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரசன்னா – சினேகா தம்பதிகள் இன்ஸ்டாவில் கூறியதாவது:
இன்றிலிருந்து கொஞ்ச நாளில் நீ வளர்ந்து விடலாம்! ஆனால் என் இதயம் எப்போதும் உன்னுடன் இருக்கும். இன்றிலிருந்து ஒருநாள் நீ பெரிய பெண்ணாக வளரலாம்! ஆனால் எப்போதும் என் குழந்தையாக இருப்பாய். உன் அரவணைப்பு, உன் முத்தங்கள், உன் புன்னகை, உன் கருணை, என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தம் சேர்க்கிறது. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் சினேகா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.