தெலுங்கு திரை உலகின் பிரபல இளம் நடிகர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுதிர் வர்மா ‘செகண்ட் ஹேண்ட்’, ‘குண்டனபு பொம்மா’, ‘ஷூட்டவுட் அலரு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் . இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்ததால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நடிகர் சுதிர் வர்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுதிர் வர்மாவின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.