‘நேரம்’, ’பிரேமம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான ’கோல்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தநிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கோல்டு’ திரைப்படத்தை விமர்சனம் செய்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக பதிவு செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது ’கோல்டு’ படத்தை பற்றி தவறாக பேசுவது உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், ஆனால் எனக்கு அது நல்லதல்ல. உங்களுடைய நிம்மதிக்காக என்னை விமர்சனம் செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன். என் முகத்தை இணையத்தில் காட்டாமல் போராட்டம் நடத்தப் போகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை, நீங்கள் என்னை கிண்டல் செய்யவோ அல்லது பொது இடத்தில் துஷ்பராகம் செய்யவும் உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன், அதன் பிறகு என் மனைவி, குழந்தைகள், என்னை சுற்றி இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் கீழே விழும்போது அவர்கள் தான் என் அருகில் நின்று என்னை தூக்கி விடுவார்கள், நான் கீழே விழுந்த போது உங்கள் முகத்தில் தோன்றிய சிரிப்பை என்னால் மறக்க முடியாது, யாரும் வேண்டுமென்று கீழே விழுவது இல்லை, அது இயற்கையாக நடக்கும், ஆனால் அதே இயற்கை என்னை மீண்டும் தூக்கி விடும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.