விஜய்சேதுபதியின் ‘மைக்கேல்’ டிரைலர்!!

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Vijaysethupathy, Varaladshumi, Mychal, 23th Jan 2023

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சந்தீப் கிஷான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தீஷ், அய்யப்பன் ஷர்மா, அனுஷ்யா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என்பன உள்ளது.

Vijaysethupathy, Varaladshumi, Mychal, 23th Jan 2023

குறிப்பாக விஜய் சேதுபதி வழக்கம் போல் நெகட்டிவ் கரக்டரில் அசத்தியுள்ளார் என்பதும், வரலட்சுமி அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரியவருகிறது.

டிரைலரின் ஆரம்பத்தில் ’பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்றுவிடும், அவ்வளவு விஷம் பெண்ணுக்கு’ என்று தொடங்கி, ஆமாம் ஒரு பெண்ணுக்காகத்தான் இதையெல்லாம் செய்யிறன் பெண்ணுக்காக இல்லைன்னா இந்த உலகத்துல எதுக்கு சார் ஒருத்தன் வாழணும்’ என்று முடிவடைவதால் இந்த படத்தின் கதை ஒரு பெண்ணை மையப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.