‘ஏகே 62’ படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…

தல அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வெற்றி பெற்றது. இந்தநிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajith, Vignesh Sivan, 3th Jan 2023

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இதுவரை விக்னேஷ் சிவன் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி படங்களையே இயக்கி வந்த நிலையில் அஜித்தை வைத்து அவர் இயக்கும் ‘ஏகே 62’ படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகிய இரண்டும் இருக்கும் என்றும் செய்தி வெளிவந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிகை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் என்னென்ன அப்டேட்டுகள் வெளிவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.