தளபதி 67 படத்தில் பகத் பாசில் இணைவது குறித்து வெளியான தகவல்

சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸானதுமே தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கவுள்ளது. தளபதி 67 படத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

மேலும் ‘விக்ரம்’ வெற்றி படத்தில் நடித்த பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Bhagat Basil to join Thalapathy 67

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பகத் பாசில் ‘லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் நானும் அந்த படத்தில் இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பகத் பாசில் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.