சொந்தமாக தொழில் தொடங்கிய பிரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்து அதன்பின் தொடர்களில் நடித்து, தற்போது திரைத்துறையில் நாயகியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

மேயாத மான் படத்தில் முதன்முறையாக நாயகியாக நடிக்க தொடங்கிய பிரியாவின் பயணம் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கடற்கரை பக்கத்தில் புதிய வீடு வாங்கியதாக அறிவித்த நடிகை இப்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக வீடியோவுடன் பதிவு செய்துள்ளார். இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.