பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் துணிவு

பொங்கல் விருந்தாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல சாதனைகளை படைத்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Audacity to hunt at the box office

மேலும் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் துணிவு, இதுவரை தமிழகத்தில் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகமாக வசூல் செய்த விஸ்வாசம், வலிமை ஆகிய இரு திரைப்படங்களின் வசூலை துணிவு முந்திவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.