அஞ்சலி கேட்ட சம்பளத்தை கேட்டு தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்

தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. தற்போது இவர் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படம் உருவாகியுள்ளது. ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்னும் வெளிவராத நிலையில், அஞ்சலிக்கு படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளதால். இத்திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக தன்னுடைய மார்க்கெட் உயரும் என்று அஞ்சலி நினைக்கிறார்.

Producers are furious after asking for the salary Anjali asked for

இதனால் இப்படத்திற்கு பின் அஞ்சலி ஒப்பந்தமாகும் புதிய படங்களுக்கு இப்பவே தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். ரூ. 1 கோடி வரை நடிகை அஞ்சலி தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதால், தயாரிப்பாளர்கள் சற்று அதிர்ச்சியடைந்து விலகி வருகின்றனராம்.

கடைசியாக அஞ்சலி நடிப்பில் வெளிவந்த ‘தி ஃபால்’ வெப் சீரிஸ் கூட வெற்றிபெறாத நிலையில், ரூ. 1 கோடி சம்பளமாக கேட்பது தான் தயாரிப்பாளர்களின் அதிர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.