தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்திருந்தது.
மேலும் ‘தனி ஒருவன்’ படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். அரவிந்தசாமி வில்லனாக மிரட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தனி ஒருவன் 2-ம் பாகத்துக்கான கதை தயாராகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் நானும், இயக்குனர் ராஜாவும் வேறு பணிகளில் இருந்ததால் தாமதமானது. விரைவில் தனி ஒருவன் 2 படம் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.