தளபதி 67 இல் பிக் பாஸ் ஜனனியின் கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் தகவல்

சமீபத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸானதுமே தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கவுள்ளது. தளபதி 67 படத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

Super information about Bigg Boss Janani's character in Thalapathy 67

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் புகழ் ஜனனியும் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது தளபதி 67 இல் ஜனனியின் கேரக்டர் குறித்த தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தளபதி 67 திரைப்படத்தில் விஜயின் மகளாக ஜனனி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.