இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் வெளிவந்த கடந்த 10 நாட்களில் ரூ. 100 கோடி வரை வாரிசு படம் வசூல் செய்துள்ளது.
தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வாரிசு படம் கேரளாவில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் வாரிசு படம் வசூலில் நினைத்த உயரத்தை எட்டவில்லை என்று தெரிவிக்கப்டுகிறது.

அங்கு இதுவரை ரூ. 12 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய்யுடைய படங்கள் மலையாளம் மற்றும் தெலுங்கில் அதிகம் வசூல் செய்யும் என்று எண்ணிய நிலையில், இப்படியொரு நிலை ஏட்பட்டுள்ளது ரசிகர்களுக்கு கவலையை உண்டாக்கியுள்ளது.