உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்வின் இறுதி எபிசொட்டுக்கள் இன்றும் நாளையும் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ள நிலையில், தற்போது வரை போட்டியாளர்கள் விக்ரம், அஸீம் மற்றும் ஷிவின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்வின் இறுதி மேடை நிகழ்வில் போட்டியாளர் ஷிவினின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இன்ப அதிர்ச்சியை ஷிவின் எப்படி வெளிப்படுத்துவார் என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.