துணிவு, வாரிசு திரைப்படங்களை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ்

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் பெரும் கொண்டாட்டங்களை மேற்கொண்டனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Madurai collector notice to 34 theaters that screened Thadhavu, Varisu movies

இந்த நிலையில் வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை அனுமதித்த நேரத்தை தவிர்த்து 11ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு படங்களை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.