பொங்கல் விருந்தாக 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளியான ’துணிவு’ மற்றும் ’வாரிசு’ இரு திரைப்படங்களும் வெளிவந்த 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் ரூ. 98 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ. 97 கோடியும் வசூல் செய்துள்ளது.
மேலும் உலக அளவில் ’துணிவு’ திரைப்படத்தை விட ’வாரிசு’ திரைப்படம் வசூலில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.