சமூகவலைத்தளங்களை கலக்கும் தளபதி 67 இன் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள்

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. வாரிசு படம் ரிலீஸானதுமே தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கவுள்ளது. தளபதி 67 படத்தில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தளபதி 67 படத்தில் பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனனிக்கு விஜய் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி 67 திரைப்படத்தில், 777 சார்லி படத்தில் கதாநாயகனாக நடித்துப் பிரபலமான ரக்ஷித் ஷெட்டியும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து ரக்ஷித் ஷெட்டியை, படக்குழு அணுகியதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ID கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சமூகவலைத்தளங்களை கலக்கும் தளபதி 67 இன் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள்