ஜிவி பிரகாஷின் மாறுபட்ட நடிப்பில் கள்வன் டீசர்!!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் சற்றுமுன் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Kalvan, GV Pirakash, Barathiraja, Ivana, 13th Jan 2023

சங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகின்றது. காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில் சம்பவங்களுடன் கூடிய கதையம்சம் கொண்டதாக படத்தின் கதை அமைத்துள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தநிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Kalvan, GV Pirakash, Barathiraja, Ivana, 13th Jan 2023

காட்டுப்பகுதியில் நடக்கும் மயான கொள்ளை உள்பட பல மர்மமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அந்த சம்பவங்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்குவது தான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக ‘லவ் டுடே’ நாயகி இவானா நடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகவுள்ளது.