‘துணிவு’ படம் குறித்து பிரபல இயக்குனர் கருத்து.

பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thunivu, Ajith, H. Vinoth, Vasanhabalan, 12th Jan 2023

இந்தநிலையில் இந்த படம் குறித்து பல பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அதாவது தற்போதைய ஒரு சமுதாய பிரச்சனையை மிகவும் தைரியமாக ஒரு மாஸ் நடிகரை வைத்து கூறியுள்ளதால் இந்த செய்தி அடிமட்ட பொதுமக்கள் வரை சென்றடையும் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி ஒரு நாட்டின் நம்பிக்கைக்கு உரிய அமைப்புகளில் ஒன்று வங்கிகள் என்ற நிலையில், அந்த வங்கிகளே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவது குறித்த விலாவாரியான ஆய்வுகள் நடத்தி எச் வினோத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும் இந்த படத்தை ஒவ்வொரு குடிமக்களும் பார்த்து வங்கிகள் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகினறது.

Thunivu, Ajith, H. Vinoth, Vasanhabalan, 12th Jan 2023

இதனையடுத்து தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம். அஜீத் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் வசனமும் திரையரங்கைக் களிப்பிற் குள்ளாக்குகிறது. பணம் சம்மந்தமாக இன்னொரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இயக்குநர் H.விநோத் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.