ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ரன் பேபி ரன்’ படத்தின் ஒன்றரை நிமிட வீடியோ..

காமெடி நடிகராக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’எல்கேஜி’, ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’வீட்ல விசேஷம்’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகிஇருந்தன.

Aishwarya Rajesh, RK Balaji, Run Baby Run, 12th Jan 2023

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ’ரன் பேபி ரன்’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜியான் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஒன்றரை நிமிடம் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில் இருந்து இந்த படம் முழுக்க முழுக்க ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது, ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரை சுற்றி தான் கதை பின்னப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. மேலும் முதல் முறையாக ஆர்.ஜே பாலாஜி காமெடி இல்லாமல் ஒரு சீரியசான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகின்றது .

மதன் படத்தொகுப்பில் சாம் சிஎஸ் இசையில் யுவா ஒளிப்பதிவில் உருவாகிய இந்த படத்தில் ’ஜெய் பீம்’ படத்தில் நடித்த தமிழ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ராதிகா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.