வாரிசா? துணிவா? முதல் நாள் வசூல் குறித்த தகவல்

பொங்கல் விருந்தாக ’துணிவு’ மற்றும் ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி நடுநிலை ரசிகர்களும் இரண்டு திரைப்படங்களும் நன்றாக இருப்பதாக கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Thunivu, Varisu, Vijay, Ajith, 12th Jan 2023

இந்த நிலையில் நேற்று வெளியான ’துணிவு’ மற்றும் ’வாரிசு’ திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அஜீத் நடித்த ’துணிவு’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.17.5 கோடியும் இந்திய அளவில் ரூ.24 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் உலகம் முழுவதும் ’துணிவு’ திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 30 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 17 கோடியும் இந்திய அளவில் 26.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.35 கோடி வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களில் இருந்து தமிழகத்தைப் பொறுத்தவரை ’துணிவு’ திரைப்படம் ’வாரிசு’ படத்தை விட ரூ.50 லட்சம் அதிக வசூல் செய்திருந்தாலும் உலக அளவில் ’துணிவு’ திரைப்படத்தை விட ’வாரிசு’ திரைப்படம் 5 கோடி ரூபாய் அதிகமாக வசூல் செய்துள்ளது.