பிரியா அட்லீயின் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரக அறிமுகமானவர் அட்லீ. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருவதுடன் இவரது படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Atlee, Priya, 11th Jan 2023

ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜாராணி திரைப்படத்தை அடுத்து விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இந்த வருடத்தில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கியுள்ள ஜவான் திரைப்படம் வெளியாகிவிடும் என அட்லீ அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இயக்குனர் அட்லீக்கு கடந்த 2014ம் ஆண்டு பிரியா என்பவராய் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆன பிறகு தற்போது அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக உள்ளார்.

இந்தநிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அட்லீ தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.