’வாரிசு’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. பொங்கல் விருந்தாக வெளியாகியிருக்கும் இந்தப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் குஷ்பு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது வெளியான புகைப்படங்களும் வைரலாகியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’வாரிசு’ இன்று வெளியாகி உள்ள நிலையில் அதில் குஷ்பூ நடித்த காட்சி இல்லாததை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து விஜய், ராஷ்மிகாவுடன் குஷ்பு இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டு நீங்கள் நடித்த இந்த காட்சி படத்தில் எங்கே? என்ன கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு குஷ்பு என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

’வாரிசு’ படத்தில் சங்கீதா மற்றும் ராஷ்மிகாவின் அம்மாவாக குஷ்பு நடித்திருந்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளன.