வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி அதாவது நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 225 கோடி என்றும் அதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.125 கோடி என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்தநிலையில்

ராஷ்மிகா மந்தனா: ரூ.4 கோடி
சரத்குமார்: ரூ.2 கோடி
பிரபு: ரூ.2 கோடி
பிரகாஷ்ராஜ்: ரூ.1.50 கோடி
ஷாம்: ரூ.1 கோடி
ஸ்ரீகாந்த்: ரூ.60 லட்சம்
குஷ்பு: ரூ.40 லட்சம்
யோகிபாபு: ரூ.35 லட்சம்
ஜெயசுதா: ரூ.30 லட்சம்

அதேபோல் இயக்குனர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர்களும் கோடிகளில் சம்பளம் வாங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் அதிகாரபூர்வமானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.