சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ டிரைலர்

குணசேகர் இயக்கத்தில் பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ‘ஷாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Sakunthalam, Samantha, 09th Jan 2023

மகாபாரதத்தில் ஒரு பிரிவான சகுந்தலை என்ற இந்த கதையை மகாகவி காளிதாசர் எழுதியுள்ளார். இந்த கதையை தழுவி தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் சகுந்தலையை மன்னன் துஷ்யந்தன் தற்செயலாக சந்தித்து காந்தர்வ திருமணம் செய்து கொள்கிறான். அதன் பிறகு நாடு திரும்பும் துஷ்யந்தன் விரைவில் சகுந்தலையை வந்து அழைத்து செல்வதாக கூறி ஒரு முத்திரை மோதிரத்தையும் கொடுக்கிறான். இந்த நிலையில் ஒரு முனிவரின் சாபம் காரணமாக சகுந்தலையை துஷ்யந்தன் மறந்துவிட, அரசன் கொடுத்த முத்திரை மோதிரத்தையும் சகுந்தலை தொலைத்து விடுகிறாள். இதன் பின் அவர்கள் எப்படி இணைந்தார்கள்? சாபவிமோசனம் எப்படி பெற்றார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

Sakunthalam, Samantha, 09th Jan 2023

மணிஷர்மா இசையில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் சமந்தா, தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கெளதமி, அதிதிபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இன்று வெளியாகியுள்ள இரண்டு நிமிடத்திற்கு மேலான டிரைலருக்கு பின் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.