வரும் பொங்கல் கொண்ட்டாட்டமாக தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் வாரிசு. மாஸ் படங்களாக நடித்து வந்த விஜய் திடீரென குடும்ப செண்டிமெண்ட் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்திற்காக மொத்தமாக ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
