நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல முள்ளு விழுந்தாலும் கண்ணு திறந்தே தான் இருக்கணும் – விஜய்யின் ‘வாரிசு’ ட்ரைலர்!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Varisu, Vamsy, Thaman, 04th Jan 2023

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகின்றது.

சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் என ஒட்டுமொத்த கலவையாக இருக்கும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.

அதுமட்டுமன்றி தமனின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது .

Vijay, Varisu, Vamsy, Thaman, 04th Jan 2023

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.