வாரிசு ட்ரைலர் தாமதத்திற்கு காரணம்?

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

வாரிசு ட்ரைலர் தாமதத்திற்கு காரணம்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் வாரிசு. மாஸ் படங்களாக நடித்து வந்த விஜய் திடீரென குடும்ப செண்டிமெண்ட் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என கூறப்படுகிறது.

படம் ரிலீஸ் ஆக இன்னும் பத்து நாட்களை விட குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை வாரிசு ட்ரைலர் வெளியாகவில்லை.

புத்தாண்டு ஸ்பெஷலாக துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்பதால் ட்ரைலரில் அதிகம் ஆக்ஷ்ன் காட்சிகளும், மாஸ் வசனங்களும் இடம்பெற்று இருந்தது. வாரிசு படத்தின் ட்ரைலர் அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கும் வகையில் வசனங்கள் இருக்க வேண்டும் என படக்குழு பணியாற்றி வருகிறதாம். அதனால் தான் ட்ரைலர் வெளியாக தாமதம் ஆகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.