2023 பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித் படங்கள் நேரடியாக மோதுவதால் ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். தமன் வாரிசு படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
வாரிசு படத்தின் புரோமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்நிலையில் இயக்குனர் வம்சி தனது மனைவி மாலினி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..


