இணையத்தை ஆக்கிரமித்த துணிவு டிரெய்லர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த டிரைலர் யூ டியூப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.