சாதனை படைத்த துணிவு டிரெய்லர்

பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த டிரைலர் ஒரே நாளில் யூ டியூப்பில் 16 மில்லியன் பார்வைகளை கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.